இலங்கை செய்தி

இலங்கை ஜனாதிபதி தேர்தல் – விஞ்ஞாபனத்தை வெளியிட்ட ரணில்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் வெளியிடப்பட்டது.

“ரணிலுடன் நாட்டை வெற்றிகொள்ளும் ஐந்தாண்டுகள்” என்ற தொனிப்பொருளில் இந்த தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது.

“தேரவாத வர்த்தகப் பொருளாதாரம், 2025 இற்கு அப்பால் செல்லும் செயல்முறை, ஒளிமயமான சமுதாயத்தை நோக்கி, வெற்றிபெறும் தாய்நாடு, ஒன்றிணைந்த இலங்கை” ஆகிய 05 பிரதான கூறுகளை இந்த தேர்தல் விஞ்ஞாபனம் உள்ளடக்கியுள்ளது.

2022 நெருக்கடிக்குப் பிறகு நாங்கள் சரியான பாதையில் செல்கிறோம். இந்த பயணத்தின் அடுத்த 5 வருடத்திற்கான திட்டம் என்னிடம் மட்டுமே உள்ளது.

உங்கள் வாக்கு மூலம் ஒருங்கிணைந்த இலங்கையை பிரகாசமான மற்றும் நிலையான எதிர்காலத்திற்கு கொண்டு செல்வேன்.வாழ்க்கை சுமையை குறைத்தல்

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் 2022 ஆம் ஆண்டிலிருந்து குறைந்துள்ளன. தொடர்ந்து குறையும். அதே சமயம் குடும்பச் சுமையும் படிப்படியாகக் குறைகிறது.

எனது திட்டம் அத்தியாவசிய பொருட்களின் மீதான வரிகளை நீக்கி உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும். அதே சமயம் நமக்குத் தேவையானதை இறக்குமதி செய்யவும் வாய்ப்பளிக்கும்.

புதிய வேலைவாய்ப்புகள் மற்றும் அதிக சம்பளம்

புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும், இதனால் தொழில் சந்தை விரிவடையும். இது தவிர, புதிய வருமானம் ஈட்டும் வாய்ப்புகளும் அதிகரிக்கும்.

உங்கள் வரிச்சுமை குறையும்

எதிர்காலத்தில் தொழில் வல்லுநர்களுக்கு வரியில்லா சேவை சலுகைகளை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். மறைமுக வரிகளால் பலர் பாதிக்கப்படுகின்றனர். இந்த வரிகளை படிப்படியாக ரத்து செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இந்த இரண்டு பணிகளையும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் செயல்படுத்தி, வரி செலுத்துவோருக்கு வரிச் சலுகை வழங்குவேன்.

பொருளாதாரத்திற்கான திட்டம்

நமது பொருளாதாரம் மேம்பட்டு வருகிறது, ஆனால் இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது.

எனது திட்டம் முதலீட்டுக்கு உகந்தது, அதாவது சிறந்த சுகாதாரம், கல்வி மற்றும் மேலதிக பயிற்சி போன்ற நமக்குத் தேவையான சேவைகளைப் பெற முடியும் – நமது பொருளாதார முன்னேற்றம் நிலையான மற்றும் உற்பத்தித் திறன் கொண்ட எதிர்காலத்தை உருவாக்கும்.

உறுமய மற்றும் அஸ்வெசும திட்டங்கள்

உறுமய மற்றும் அஸ்வெசும திட்டங்கள் விரிவுபடுத்தப்படும். அதனால் நிலைப்பும் செழிப்பும் உருவாகும்.

கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இந்நிகழ்வு நடைபெறுவதுடன், அதன் நேரடி ஒளிபரப்பு கீழே காட்டப்பட்டுள்ளது.

(Visited 1 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content