Site icon Tamil News

கின்னஸ் உலக சாதனை படைத்த இலங்கை மருத்துவர்கள்!

உலகின் மிகப் பெரிய மற்றும் கனமான சிறுநீரகக் கல்லை அகற்றி இலங்கை மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.

இலங்கை இராணுவ மருத்துவர்கள் இன்று (14) மேற்கொண்ட சத்திரசிக்சையின் மூலமே இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

இதில்  கப்டன் (டாக்டர்) டபிள்யூ.பி.எஸ்.சி பத்திரத்ன மற்றும் டாக்டர் தமாஷா பிரேமதிலக ஆகியோருடன் இணைந்து, சிறுநீரக ஆலோசகர், லெப்டினன்ட் கேணல் டாக்டர். கே. சுதர்ஷன், கொழும்பு இராணுவ மருத்துவமனையின் ஜெனிட்டோ சிறுநீர் பிரிவுத் தலைவர் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

கேணல் டாக்டர் யு.ஏ.எல்.டி பெரேரா மற்றும் கேணல் டாக்டர் சி.எஸ் அபேசிங்க ஆகியோரும் அறுவை சிகிச்சையின் போது ஆலோசகர் மயக்கவியல் நிபுணர்களாக பங்களித்துள்ளனர்.

கொழும்பு இராணுவ மருத்துவமனையில் நடைபெற்ற இந்த சத்திரசிகிச்சையின்போது  13.372 செ.மீ நீளமும் 801 கிராம் எடையும் கொண்ட கல் அகற்றப்பட்டுள்ளது.

தற்போதுள்ள கின்னஸ் உலக சாதனைகளின்படி, உலகில் காணப்படும் மிகப்பெரிய சிறுநீரகக் கல் கடந்த 2004 ஆம் ஆண்டு இந்தியாவில் அகற்றப்பட்டுள்ளது.

Exit mobile version