இலங்கை – றக்பி போட்டியில் தேசிய மட்டத்திற்கு முன்னேறிய திருகோணமலை திரியாய் தமிழ் மகா வித்தியாலயத்தின் அணியினர்!

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான றக்பி போட்டியில் திருகோணமலை திரியாய் தமிழ் மகா வித்தியாலயம் பெண்கள் அணி மூன்றாமிடத்தினைப் பெற்று தேசிய மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான றக்பி போட்டியானது நேற்றைய தினம் (05.08.2025) கந்தளாய் லீலாரத்ன மைதானத்தில் நடைபெற்றது.
இப் போட்டியில் திரியாய் தமிழ் மகா வித்தியாலயத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்ட 20 வயது பெண்கள் அணி கிழக்கு மாகாணமட்டத்தில் மூன்றாமிடத்தினைப் பெற்று தேசிய மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.
வெறுமனே இரண்டாம் நிலைப்பிரிவில் 150 மாணவ, மாணவிகளைக் கொண்டு, அதிகஷ்டப் பிரதேசத்தில் இயங்கும் இப் பாடசாலை தமது வரலாற்றில் முதல் தடவையாக றக்பி விளையாட்டில் களமிறங்கி வராலற்று வெற்றியினைப் பெற்றிருக்கின்றமை குறிப்பித்தக்க விடயமாகும்.
அதேவேளை ஆண்கள் றக்பி அணி கால் இறுதிப் போட்டியில் பங்கு பற்றியிருந்த போதிலும் வெற்றி பெறத் தவறியது.