இலங்கையில் பாணின் விலையை 10 ரூபாவால் குறைக்க நடவடிக்கை

இலங்கையில் பாணின் விலையை 10 ரூபாவால் குறைக்க வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
கோதுமை மாவின் விலை குறைப்பைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோகிராம் செரண்டிப் (Serendib Flour Mills) மற்றும் ப்ரீமா (Prima Ceylon) கோதுமை மாவின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து, ஏனைய வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலைகளைக் குறைப்பதற்கும் வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 1 times, 1 visits today)