இலங்கையில் தீவிர பாதுகாப்பு – 40,000 பொலிஸார் குவிப்பு

இலங்கையில் எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு, பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நாடளாவிய ரீதியில் 40,000 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பொது மக்கள் நடமாடும் இடங்களில் சீருடை அணிந்த அதிகாரிகளுக்கு மேலதிகமாக 500 இற்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் உத்தியோகத்தர்கள் சிவில் உடையில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இது தவிர, புலனாய்வு அதிகாரிகளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் அவர்களின் பணிகளை மேற்பார்வையிட 48 மூத்த அதிகாரிகள் மற்றும் 769 ஆய்வு தர அதிகாரிகளும் பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மேல் மாகாணத்தில் மாத்திரம் 6,500 இற்கும் அதிகமான பொலிஸார் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
(Visited 11 times, 1 visits today)