ICC T-20 உலக்கிண்ண தொடருக்கான இலங்கை அணி விபரம் அறிவிப்பு!
ஐ.சி.சி. T-20 உலகக்கிண்ண தொடருக்கான இலங்கை அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
16 பேரடங்கிய அணியில் தனஞ்சய டி சில்வா, ப்ரமோத் மதுஷான் ஆகிய இருவருக்கும் இடமளிக்கப்படவில்லை.
இங்கிலாந்து அணியுடனான தொடர்பில் இணைக்கப்படாத கமிந்து மெண்டிசுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டங்களில் பிரகாசித்த 23 வயதான இளம் வீரர் பவன் ரத்நாயக்க முதல் தடவையாக உலகக்கிண்ண அணியில் இடம்பிடித்துள்ளார்.
இலங்கை அணி விவரம் வருமாறு,
தசுன் ஷானக்க (தலைவர்)
பெத்தும் நிஸ்ஸங்க
காமில் மிஷார
குசல் மெண்டிஸ்
குசல் பெரேரா
சரித் அசலன்க
கமிந்து மெண்டிஸ்
ஜனித் லியனகே
பவன் ரத்நாயக்க
துனித் வெல்லாலகே
வனிந்து ஹசரங்க
மஹீஷ் தீக்சன்
துஷ்மன்த சமீர
மதீஷ பத்திரண
ஏஷான் மாலிங்க
உலகக்கிண்ண தொடரில் பங்கேற்கவுள்ள பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் இலங்கை வந்துள்ளன.
T 20 உலகக்கிண்ண தொடரில் இலங்கை மற்றும் இந்தியாவில் நடைபெறவுள்ளன.





