இலங்கை – ஓய்வு பெற்ற அரச ஊழியர்களுக்கு சலுகைகளை வழங்க தீர்மானம்!

இலங்கையில் ஓய்வு பெற்ற அரச ஊழியர்களுக்கு சலுகைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் டாக்டர் சந்தன அபயரத்ன தெரிவித்துள்ளார்.
2026ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவு திட்டத்தில் இதற்கான யோசனைகள் முன்மொழியப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
“ஆரோக்கியமான மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை” என்ற தலைப்பில் ஓய்வூதியத் துறை ஏற்பாடு செய்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், ஓய்வு பெற்ற சமூகத்தினரை பாதிக்கும் 700000 பிரச்சினைகளை நாம் அடையாளம் கண்டுள்ளோம். ஓய்வு பெற்ற அமைப்புகளை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளோம்.
இன்னும் சில பிரச்சினைகளை நாம் அடையாளம் காணாமல் இருக்கலாம். இருப்பினும், உங்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பொறுப்பை நிறைவேற்ற அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.