ராப் பாடலில் சாதனை படைக்க இலங்கையில் பிறந்த பெண் தான் “ரத்யா”
ராப் பாடல் என்பது இலங்கையிலும் சரி உலகளவிலும் சரி ஆண்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர். பெண்களின் பங்களிப்பு என்பது விரல்விட்டு எண்ணும் அளவிலேயே உள்ளது.
ஆனால் இந்த தாகத்தை தீர்க்க இலங்கையில் பிறந்தவர் தான் ரத்யா அற்புதராஜா (Rathya Atputharajah).
தமிழ் கலைகளில் சொல்லிசை என்பது பழம்பெரும் படைப்புகளுடன் நெருங்கிய தொடர்புபட்ட ஒன்றாகும். நாட்டார் பாடல், நாட்டுக்கூத்து வடிவங்கள் பலவற்றில் ஜதிக்குள் உள்வாங்கப்பட்ட தாள ஆவர்தனங்களுக்கு சொல் வடிவம் வழங்கி பாடப்பட்டும் அமைப்பு பல்லாயிரம் ஆண்டுகளாக பின்பற்றப்பட்டுவருகிறது.

ஆனால் நவீன இசைப் பண்பாட்டில் இந்தச் சொல்லிசை, ரகே மற்றும் ஹிப் பொப் ஆங்கிலப் பாடல்கள் எழுச்சி பெற்ற காலத்துக்கு பிறகே அதிகம் பேசப்பட்டது.
தமிழ் ஹிப் பொப் கலாசாரம் மலேசியாவைச் சேர்ந்த யோகி B மற்றும் Doctor Burn ஆகியோரினால் “ மடை திறந்து தாவும் நதி “ என்ற இளையராஜாவின் பாடலை அடியொற்றி படைக்கப்பட்ட ஹிப் பொப் பாடலின் பெரு வெற்றியுடன் பரவத்தொடங்கியது.

பின்னர் இளசுகள் பலர் இவ்வகை புதிய சொல்லிசை பாடல்களை தனித்தமிழிலும், ஆங்கிலம் கலந்தும் பாடத்தொடங்கினர். அதன் பின்னர் சொல்லிசை கலாசாரம் சூடு பிடிக்கத்தொடங்கியது.
தமிழ் திரைப்படங்களில் ஏதாவது ஒரு பாடலேனும் கட்டாயம் சொல்லிசையில் படைக்கப்படவேண்டுமென்ற அளவுக்கு ஆதிக்கம் செலுத்தியது.

ஆனால் ஆண்களின் பங்களிப்பில் ஒரு சதவிகிதம் அளவு கூட இதில் பெண்கள் உள்வாங்கப்படவில்லை. ஆண்கள் அடித்தொண்டையின் அதிர்விலும் உச்சஸ்தாயியின் எல்லையிலுமாக இதை பாடியிருந்ததனால், பெண்களின் மெல்லிய (Frequency) க்கு இந்த பாடல் முறை உள்வாங்கப்படுவதிலிருந்த கடினமும் இதற்கு காரணமாக அமையலாம்.

இந்த பெண் ராப்பருக்கான பஞ்சத்தையும், உச்சரிப்பின் தேவையையும் பூர்த்தி செய்ய ஈழத்தில் உதித்த ஓர் திறமையாக நான் ரத்யா அற்புதராஜா (Rathya Atputharajah).

ஆண்களுக்கு நிகராக பெண்களாலும் முடியும் என்பதை பல துறைகளிலும் சாதித்துக்காட்டியவர்களின் வரிவையில், ராப் பாடலில் தனக்கென தனி இடம் பிடித்த ரத்யா பெறுமைக்குறியவர் என்பதில் சந்தேகமில்லை.






