இலங்கை

இலங்கை: சூடுபிடிக்கும் ஜனாதிபதித் தேர்தல்! சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் ரணில்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுவாரென ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தேர்தலை மிகக் குறுகிய காலத்திற்குள் நடத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவைக் கோரியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் , எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க அதிக வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டுவார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

தேர்தல் திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்தவுடன் விக்ரமசிங்க தாம் போட்டியிடுவதாக உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

தேர்தலில் தமக்கு ஆதரவளிக்குமாறு ஜனாதிபதி அண்மையில் சமகி ஜன பலவேகய மற்றும் தேசிய மக்கள் சக்திக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

(Visited 6 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்