இலங்கை – லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பொலிஸ் சாஜன்ட் ஒருவர் கைது

கீர்த்திபண்டாரபுர பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் ஒரு பொலிஸ் சர்ஜன்ட் இன்று ரூ. 10,000 லஞ்சம் பெற்றபோது கைது செய்யப்பட்டதாக லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கந்தகெட்டியவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் அளித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மணல் போக்குவரத்து தொழிலை எந்த தடையும் இல்லாமல் தொடர அனுமதிக்க அதிகாரி பணம் கேட்டதாகக் கூறினார்.
லஞ்சம் ஊழல் குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழு அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது, கீர்த்திபண்டாரபுரவில் உள்ள ஒரு ஹோட்டலில் அந்த அதிகாரி கைது செய்யப்பட்டார்.
பின்னர் வலப்பனை நீதவான் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து ஓகஸ்ட் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது
(Visited 1 times, 1 visits today)