இலங்கை – மஹிந்தவை காண படையெடுக்கும் மக்கள்!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை காண மக்கள் படையெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மக்களுடன் அவர் பேசி மகிழும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. இது குறித்து அவர் இட்டுள்ள முகநூல் பதிவும் வைரலாகியுள்ளது.
அந்தப் பதிவில், நம்பிக்கை மற்றும் பரஸ்பர மரியாதையை அடிப்படையாகக் கொண்ட மக்களின் அன்பு இலாப நோக்கங்களுக்கு அப்பாற்பட்டது என்று அவர் கூறியுள்ளார்.

தனது வாழ்நாளின் பெரும்பகுதியை மக்களிடையே கழித்ததால், மக்களின் அன்பை நன்கு அறிந்திருப்பதாகவும், இதன் காரணமாக, அதன் மதிப்பு எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாக உள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இது ஒரு அரசியல் உறவு மட்டுமல்ல, உடைக்கக் கடினமான ஒரு இதயப்பூர்வமான பிணைப்பு என்றும் அந்தப் பதிவில் மேலும் தெரிவித்துள்ளார்.
எனவே, அவற்றை உடைக்கும் முயற்சிகள் மூலம் இன்னும் அதிகமான பிணைப்புகளை வலுப்படுத்த முடியும் என்பதை சுட்டிக்காட்டிய முன்னாள் ஜனாதிபதி, மக்களுடன் செலவிடும் இந்த நேரம் முழுவதும் ஒரு தலைவராக தான் பெறக்கூடிய மிகப்பெரிய மகிழ்ச்சியை அனுபவிப்பதாகக் கூறியுள்ளார்.





