இலங்கை செய்தி

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க கடற்படை தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது

தீவை பாதித்துள்ள பாதகமான வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக தெற்கு, கிழக்கு, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களை உள்ளடக்கி அனர்த்த நிவாரணக் குழுக்கள் இன்று (2025 நவம்பர் 28,) கடற்படையால் கடமையில் ஈடுத்தப்பட்டுள்ளன, மேலும் இந்த நிவாரணக் குழுக்கள் தொடர்ந்து அனர்த்த நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

அதன்படி, கடற்படை அனர்த்த நிவாரணக் குழுக்கள், அனர்த்த முகாமைத்துவ மையத்துடன் இணைந்து, 2025 நவம்பர் 27 ஆம் திகதிக்குள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள் உட்பட 911 பேரைப் பாதுகாப்பாகக் கொண்டு செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக, பலத்த காற்றினால் விழுந்த மரங்களை அகற்றுதல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பது மற்றும் சிறிய படகுகள் மூலம் மக்களின் அன்றாட தேவைகளுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்குதல் உள்ளிட்ட அனர்த்த நிவாரண நடவடிக்கைகளை கடற்படை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. தேவைக்கேற்ப கடமையில் ஈடுபடுத்த ஒவ்வொரு கடற்படை கட்டளையிலும்மேலதிக அனர்த்த நிவாரண குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

hqxd1

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!