வெளிநாட்டு முதலீடுகள் மூலம் கிடைத்த வாய்ப்பை தவறவிட்ட இலங்கை!
கடந்த தசாப்தத்தில் வெளிநாட்டு முதலீடுகள் மூலம் கிடைத்த வாய்ப்பை இலங்கை உரிய முறையில் பயன்படுத்தவில்லை என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதார துறை பேராசிரியர் பிரியங்க துனுசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், வெளிநாட்டு முதலீடுகள் மூலம் பெற வேண்டிய நன்மைகள் இந்நாட்டில் உருவாக்கப்படாமையே இந்த நிலைக்கு காரணம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், இது குறித்து விளக்கமளித்த அமைச்சர் பந்துல குணவர்த்தன, தவறான சித்தாந்தங்களை சமூகமயப்படுத்துவதால் முதலீடுகள் மூலம் பெறக்கூடிய நன்மைகள் சில சந்தர்ப்பங்களில் தவறவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
(Visited 3 times, 1 visits today)