இலங்கை: கொடவெஹெரவில் உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

கொடவெஹெர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அஹூபொடகம பிரதேசத்தில் , உள்நாட்டு துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொடவெஹெர பொலிஸார் தெரிவித்தனர்.
கொடவெஹெர பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொடவெஹெர பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடையவர் ஆவார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடவெஹெர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 26 times, 1 visits today)