இலங்கை செய்தி

இலங்கை -மாலைதீவு பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து ஆராய்வு!

இலங்கைக்கான மாலைதீவு தூதுவர் Masood Imad, பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தவை சந்தித்து பேச்சு நடத்தினார்.

பாதுகாப்பு அமைச்சில் மரியாதை நிமித்தம் மேற்படி சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது பரஸ்பர முக்கியத்துவம் மிக்க விடயங்கள் தொடர்பாக இரு தரப்பினரும் கலந்துரையாடினர்.

குறிப்பாக, இலங்கை மற்றும் மாலத்தீவுக்கு இடையில் நீண்டகாலமாக நிலவி வரும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு துறைகளில் தொடர்புகளை மேம்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

இரு நாடுகளுக்கிடையிலான நெருங்கிய ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை இலங்கை பாதுகாப்பு செயலாளர் வலியுறுத்தினார்.

மாலத்தீவுடன் பாதுகாப்புத் தொடர்புகளை மேலும் விரிவுபடுத்த இலங்கை உறுதியாக செயல்பட்டு வருவதாகவும் அவர் வலியுறுத்தினார்.

இச்சந்திப்பில் மாலைதீவு பிரதி தூதுவர் Fathimath Ghina வும் பங்கேற்றிருந்தார்.

 

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!