இலங்கை: மஹபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு அதிகரிப்பு!
பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹபொல மற்றும் மாணவர் உதவித்தொகை ஆகியவற்றில் திருத்தம் மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
கல்வி அமைச்சர் மற்றும் வணிக, வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோர் இணைந்து இது தொடர்பான யோசனையை முன்வைத்திருந்தனர்.
இதன்படி, மாதாந்த மஹபொல புலமைப்பரிசில் கொடுப்பனவை 7,500 ரூபாய் வரையிலும், மாதாந்த மாணவர் உதவித்தொகையை 6,500 ரூபாய் வரையிலும் அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கும் வரும் வகையில் இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தேசிய கல்விக் கொள்கை மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கு எதிராக பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனம் (IUSF) இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த IUSF இன் அழைப்பாளர் உட்பட பல உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர்.
எனினும், தேர்தல் ஆணைய அதிகாரிகள், காவல்துறையினரின் உதவியுடன் போராட்டத்தைக் கலைத்தனர்.