லக்சம்பேர்க்குடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இலங்கை!
லக்சம்பேர்க்குடன் இலங்கை புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
லக்சம்பேர்க்குடன் இருதரப்பு ஆலோசனைகள் தொடர்பாக இலங்கை புரிந்துணர்வு உடன்படிக்கையை (MoU) செய்துகொண்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் நேற்று (மே 13) நடைபெற்ற 2வது ஐரோப்பிய யூனியன் (EU) இந்தோ-பசிபிக் மந்திரி மன்றத்தின் ஒரு பகுதியாக குறித்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இது குறித்து ருவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் அலி சப்ரி, லக்சம்பேர்க்கின் வெளியுறவு அமைச்சர் ஜீன் அசெல்போர்னை சந்தித்தோம்.
இதன் போது விமான சேவைகள் மற்றும் வர்த்தகம், முதலீடுகள் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துவது தொடர்பான ஒப்பந்தத்தை செயல்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது எனக் குறிப்பிட்டுள்ளார்.
(Visited 78 times, 1 visits today)