காசாவில் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்காக இலங்கை முன்னெடுத்துள்ள புதிய திட்டம்!

காஸா பகுதியில் இடம்பெற்ற மோதல்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் “காசா சிறுவர் நிதியம்” அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நேற்று (26.02) கூடிய அமைச்சரவையில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டதுடன், அதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்த ஆண்டுக்கான இப்தார் கொண்டாட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை இந்த நிதிக்கு வழங்குமாறு அனைத்து அமைச்சகங்கள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கு மக்களின் பங்களிப்பும் எதிர்பார்க்கப்படுவதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் உத்தியோகபூர்வ நிறுவனம் ஊடாக இலங்கை அரசாங்கம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்கவுள்ளது.
இதேவேளை, காஸாவிலுள்ள சிறுவர் நிதியத்திற்கான பிரஜைகளின் நன்கொடைகளை இலங்கை வங்கியின் தப்ரோபென் கிளைக் கணக்கு இலக்கமான 7040016 க்கு அனுப்பி வைக்குமாறும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு வரவு வைக்கப்பட்டுள்ள பணத்தின் வைப்புச் சீட்டை 077 69 73 039 என்ற இலக்கத்திற்கு அனுப்பி வைக்குமாறும் ஜனாதிபதி செயலகம் தெரிவிக்கின்றது.