இலங்கை

இஸ்ரேல் – பாலஸ்தீன் போர் குறித்து ஆழ்ந்த கரிசணையை வெளிப்படுத்தியுள்ள இலங்கை!

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் ஏற்பட்டுள்ள தாக்குதல்கள் மற்றும் வன்முறை அதிகரிப்பு மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது என வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், வன்முறையை உடனடியாக நிறுத்துமாறும், மேலும் பொதுமக்கள் உயிரிழப்பைத் தடுக்க அனைத்து தரப்பினரும் அதிகபட்ச கட்டுப்பாட்டை கடைப்பிடிக்குமாறும் இலங்கை அழைப்பு விடுத்துள்ளது.

“1967 எல்லைகளின் அடிப்படையில் அருகருகே வாழும் இரு நாடுகளின் சர்வதேச ரீதியில் ஒப்புக் கொள்ளப்பட்ட அளவுருக்களுக்கு இணங்க, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கு ஆதரவளிக்க இலங்கை உறுதியாக உள்ளது” என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,  “அன்புக்குரியவர்களை இழந்து வாழும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எங்கள் அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்”.

டெல் அவிவ் மற்றும் ரமல்லாவில் உள்ள இலங்கை தூதரகங்கள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் இலங்கையர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், வன்முறையின் போது இதுவரை ஒரு இலங்கையர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும்” கூறப்பட்டுள்ளது.

(Visited 10 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்