இலங்கை : 05 மாகாணங்களுக்கான ஆளுநர்களும் பதவியேற்றனர்!

புதிய ஆளுநர்கள் இன்று (25.09) ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சரத் அபேகோன் மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வட மாகாணத்தின் புதிய ஆளுநராக திரு.நாகலிங்கம் வாகனநாயகம் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
தென் மாகாணத்தின் புதிய ஆளுநராக சிரேஷ்ட நிர்வாக அதிகாரி திரு.பந்துல ஹரிச்சந்திர பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
சப்ரகமுவ மாகாண ஆளுநராக திருமதி சம்பா ஜானகி நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறாக 09 புதிய ஆளுநர்கள் இன்று ஜனாதிபதியால் பதவிப்பிரமாணம் செய்துகொண்டதாக சப்ரகமுவ மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.
(Visited 10 times, 1 visits today)