இலங்கை – அரிசி தட்டுப்பாட்டால் நுகர்வோரை நூதனமாக ஏமாற்றும் கும்பல்!

இலங்கையில் சிவப்பு அரிசிக்குப் பதிலாக வெள்ளை அரிசியைக் கலந்து விற்பனை செய்யும் மோசடி குறித்து தகவல் கிடைத்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
சந்தையில் சிவப்பு பச்சை அரிசி பற்றாக்குறை காரணமாக சில தொழிலதிபர்கள் இந்த மோசடியை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு ஏராளமான புகார்கள் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதன்படி, இது தொடர்பாக சோதனைகளை நடத்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தகவல் பணிப்பாளர் திரு. அசேல பண்டார தெரிவித்தார்.
(Visited 19 times, 1 visits today)