இலங்கை : வழமைக்கு திரும்பும் காலி சிறைச்சாலை நடவடிக்கைகள்!

கைதிகள் மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் காரணமாக மட்டுப்படுத்தப்பட்டிருந்த காலி சிறைச்சாலையின் நடவடிக்கைகள் எதிர்வரும் சனிக்கிழமை முதல் மீண்டும் வழமைக்கு திரும்பும் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அண்மையில் காலி சிறைச்சாலையில் கைதி ஒருவர் மூளைக் காய்ச்சலால் உயிரிழந்துள்ளதுடன் மேலும் எட்டு கைதிகள் காய்ச்சல் காரணமாக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், இதுவரை நால்வர் குணமடைந்துள்ளதுடன், சிறைச்சாலையின் நிலைமை வழமைக்குத் திரும்பியுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி பீ.திஸாநாயக்க, சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
(Visited 12 times, 1 visits today)