இலங்கை : அரச ஊழியர்களுக்கு வாழ்க்கை செலவு கொடுப்பனவை வழங்க நடவடிக்கை!
அரச ஊழியர்களுக்கான வாழ்க்கைச் செலவு கொடுப்பனவில் இருந்து 5,000 ரூபாவை ஜனவரி மாதம் முதல் வழங்குவதற்கு ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
2024 வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களுக்கு வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ள 10,000 ரூபா கொடுப்பனவில் இருந்து 5000 ரூபா ஜனவரி மாதம் முதல் வழங்கப்படவுள்ளது.
(Visited 10 times, 1 visits today)