பிரித்தானியாவில் வசந்த கால பொருளாதார அறிக்கை வெளியீடு
அரசாங்கம் நாட்டிற்கான சரியான பொருளாதாரத் திட்டத்தைக் கொண்டுள்ளது என நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் தெரிவித்துள்ளார்
வசந்த கால அறிக்கையை வெளியிட்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
நிச்சயமற்ற உலக சூழ்நிலையில் பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுத்துள்ளோம் என்றும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த அறிக்கையில் 2026 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி சற்று மெதுவாக வளர்ச்சியடையும் என்றும்
2027 மற்றும் 2028 ஆம் ஆண்டுகளில் வளர்ச்சி வேகம் அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
வசந்த கால அறிக்கை, முழுமையான பட்ஜெட்டுக்கு இணையானதாக இல்லாவிட்டாலும், எதிர்காலத்தில் வரி
மற்றும் அரச செலவுகள் குறித்த முக்கிய முடிவுகளை பாதிக்கக்கூடியதாக கருதப்படுகிறது.
எனினும், மத்திய கிழக்கில் நடைபெறும் மோதல் காரணமாக எரிசக்தி விலை உயர்வால் ஏற்படும் தாக்கங்கள்
இந்த கணிப்புகளில் சேர்க்கப்படவில்லை என கூறப்படுகிறது.




