ஆஸ்திரேலியாவில் 13 பேரின் உயிரை பறித்த சிலந்தி – 9 சென்றி மீற்றர் வரை வளரும்
ஆஸ்திரேலியாவின் நியூ கேஸ்லில் காணப்படும் மிகப்பெரிய சிலந்தி பூச்சி 9 சென்றி மீற்றர் வரை வளரும் என தெரிவிக்கப்படுகின்றது.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இருந்து 170 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நியூ கேஸ்ல் பகுதியில் அதிக அளவில் காணப்படும் பெரிய வகை புனல் வலை சிலந்திப் பூச்சிகள், பிக் பாய் என்ற பெயருடன் தனியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
மற்ற சிலந்திகளை விட அளவில் பெரியதாக 9 சென்றி மீற்றர் வரையில் வளரும் ஆண் சிலந்தி அதிக விஷத்துடன் கொட்டுவதால், இதுவரை 13 பேர் இறந்துள்ளனர்.
இந்த வகைப் பூச்சிகள் ஆஸ்திரேலிய ஊர்வன பூங்காவின் ஆராய்ச்சித் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும், ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
(Visited 3 times, 3 visits today)