போதைமருந்து பயன்பாட்டால் ஏற்படும் மரணங்களை தடுக்க விசேட கருவி
போதை மாத்திரை உட்கொள்வதனால் ஏற்படக்கூடிய மரணங்களை தடுக்க விசேட கருவி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் இந்த விசேட கருவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதிக போதை மாத்திரைகளை உட்கொள்வதனால் சுயநினைவை இழந்து ஆபத்தான நிலைக்குச் செல்லக்கூடிய அல்லது மரணம் சம்பவிக்க கூடிய சந்தர்ப்பங்களை தவிர்க்கும் நோக்கில் இந்த கருவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.தனியாக போதை மாத்திரை உட்கொள்ளும் நபர்கள் இந்தக் கருவியை ஆன் செய்துவிட்டு மருந்து உட்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பிட்ட ஓர் நேரம் வரையில் அந்த நபரிடம் இருந்து எவ்வித சலனமும் இல்லை என்றால் அந்தத் தகவல் குறித்த நபர் தங்கியிருக்கும் கட்டிடத்தின் பாதுகாப்பு பிரிவிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றது.இதன் மூலம் பாதுகாப்பு பிரிவினர் குறித்த நபரின் அறையை சென்று பார்வையிட்டு போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படக்கூடிய மரணத்தை தவிர்க்க முடிகிறது என தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக மிக மிஞ்சிய அளவில் போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படக்கூடிய மரணங்கள் அநேகமானவை போதை மாத்திரைகளை பயன்படுத்தியதன் பின்னர் கவனிப்பாரற்று நீண்ட நேரம் தனித்து இருப்பதினால் ஏற்படுகின்றது.
எனவே தனியாக இருப்பவர்கள் போதை மாத்திரை கொள்ளும் பொழுது இந்த கருவியை பயன்படுத்துவதன் மூலம் நீண்ட நேரம் அவர்களிடமிருந்து எவ்வித பதில்களும் கிடைக்காத சந்தர்ப்பங்களில் அது குறித்து ஓர் அலராம் ஓசை எழுப்பப்பட்டு பாதுகாப்பு பிரிவிற்கு அந்தத் தகவல் அனுப்பி வைக்கப்படுகின்றது.
இதன் மூலம் பாதுகாப்பு பிரிவினர் விரைந்து செயல்பட்டு போதை மாத்திரை பயன்பாட்டினால் ஏதேனும் உடல் ரீதியான பிரச்சனைகளை எதிர் நோக்கினால் அவர்களை வைத்தியசாலையில் உரிய நேரத்தில் சேர்த்து சிகிச்சை அளிக்க உதவுகின்றது என தெரிவிக்கப்படுகிறது.