இலங்கை

ஏப்ரல் 1 முதல் கொழும்பில் விசேட பாதுகாப்புத் திட்டம்

இவ்வருட சித்திரை புத்தாண்டு காலத்தை முன்னிட்டு ஏப்ரல் முதலாம் திகதி முதல் விசேட பாதுகாப்புத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்துப் பிரிவு மற்றும் வீதிப் பாதுகாப்பு தொடர்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.

புத்தாண்டு காலத்தில் பொதுமக்களின் நடமாட்டம் அதிகரிப்பதைக் கருத்திற்கொண்டு, விசேடமாக போக்குவரத்துப் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அதிகளவில் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களின் புகையிரத நிலையங்கள் மற்றும் பிரதான பேருந்து நிலையங்களை மையப்படுத்தி போக்குவரத்துக் கட்டுப்பாட்டுத் திட்டங்களும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்த விசேட திட்டம் ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என்பதுடன், புத்தாண்டு கொண்டாட்டங்களின் பின்னர் பொதுமக்கள் மீண்டும் கிராமங்களிலிருந்து நகரங்களுக்குத் திரும்பும் வரை இது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Mahi

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!