இலங்கை

இலங்கையர்களுக்கு விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்

இலங்கையில் குடும்ப வன்முறை தொடர்பில் அறிவிக்க ‘மிது பியச’ பிரிவுக்கு 24 மணி நேர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

குடும்ப சுகாதார பணியகம் இதனை தெரிவித்துள்ளது. 070 2 611 111 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் குடும்ப வன்முறை தொடர்பில் எந்த நேரத்திலும் தெரிவிக்க முடியும் என பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நாட்டில் சுமார் 10 வீதமான ஆண்களும் குடும்ப வன்முறைக்கு உள்ளாகின்றனர் என குடும்ப சுகாதார பணியகத்தின் மகளிர் சுகாதார பிரிவின் திட்ட முகாமையாளர் திருமதி நெத்யாஞ்சலி மபிடிகம தெரிவித்தார்.

இதேவேளை, குடும்ப வன்முறைகள் அதிகரிப்பதற்கு கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் சமூக ஊடகங்களின் பாவனையே பிரதான காரணமாக அமைந்துள்ளதாக களுபோவில வைத்தியசாலையின் மித்ரு பியசவுக்குப் பொறுப்பான வைத்திய அதிகாரி வைத்தியர் ஹேஷானி கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!