18 ஆம் திகதி விசேட நாடாளுமன்ற அமர்வு: வெளியானது அறிவிப்பு!
விசேட நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் 18 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
பிரதமரின் கோரிக்கைக்கு அமைய நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 16 இன் பிரகாரமே விசேட அமர்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் இந்த விசேட அமர்வானது சபாநாயகரால் 2025.12.12 ஆம் திகதி பிரசுரிக்கப்பட்ட 2466/33ஆம் இலக்க விசேட வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய 18 ஆம் திகதி 9.30 மணிக்கு கூடவிருப்பதுடன், இதில் கலந்துகொள்ளுமாறு அனைத்து எம்.பிக்களுக்கும் சபாநாயகர் அறிவுறுத்தியுள்ளார்.
பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்குரிய நிதியை பெறுவதற்கான குறை நிரப்பு பிரேரணையை நிறைவேற்றிக்கொள்வதற்காகவே விசேட அமர்வு இடம்பெறுகின்றது என தெரியவருகின்றது.





