ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் வரி செலுத்துவோருக்கு விசேட அறிவிப்பு

ஜெர்மனியில் வரி செலுத்தும் மக்களுக்கு முக்கிய தகவலை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

அதற்கமைய மக்கள் தங்களது வரிக்கணக்கை செலுத்தும் போது, சிறப்புச் செலவுகளைக் கோரி வரி செலுத்துவதற்கான தங்களது வருமானத்தின் எல்லையை குறைத்துக் கொள்ள முடியும்.

குறித்த சிறப்பு செலவுகள் தவிர்க்க முடியாத தனியார் செலவுகள், காப்பீடு, நன்கொடைகள், பாடசாலை கட்டணம் என தனித்தனியாக வகைப்படுத்தப்படவில்லை.

சிறப்பு செலவுகள், முன்னெச்சரிக்கை செலவுகள் மற்றும் ஏனைய சிறப்பு செலவுகள் என இரண்டாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

ஓய்வூதிய பங்களிப்புகள் மற்றும் உடல்நலக் காப்பீடு போன்ற செலவுகள் முன்னெச்சரிக்கை செலவுகளுக்காக உள்ளன.

ஏனைய சிறப்புச் செலவுகளுக்குள் தேவாலய வரி மற்றும் தனியார் பள்ளி செலவுகள் போன்றவை அடங்கும்.

தேவாலய வரி மற்றும் அடிப்படை சுகாதார காப்பீடு போன்ற சில செலவுகள் வரம்பில்லாமல் கழிக்கப்படலாம்.

எனினும், ஏனைய வரிகளுக்கு வரம்புகள் உள்ளன. உதாரணமாக, ஆரம்ப தொழில் பயிற்சிக்கான செலவுகள் 6,000 யூரோ வரை கழிக்கப்படும். மேலும் மொத்த காப்பீட்டு செலவுகள் வருடத்திற்கு 1,900 யூரோ வரை கழிக்கப்படும்.

இந்த சிறப்பு செலவுகள் வரி செலுத்தும் ஆண்டுக்கு உரியதாக இருப்பதை வரி செலுத்துவோர் கவனத்திற்கொள்ள வேண்டும். எனவே வரி விலக்குகளை அதிகரித்துக்கொள்ள செலவுகளை தனித்தனியே பட்டியலிடுவது சிறப்பது என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

(Visited 9 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!