இஸ்ரேலில் வாழும் இலங்கையர்களுக்கு விசே டஅறிவிப்பு

இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார, அங்கு வசிக்கும் இலங்கையர்களுக்கு பயணத்தை குறைக்குமாறும் பணியிடங்களில் மிகுந்த கவனத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்துகிறார்.
ஈரானில் தெரிவு செய்யப்பட்ட பல இடங்களில் இஸ்ரேலிய விமானப்படை விமானங்கள் ஏவுகணைகளை ஏவியுள்ள நிலையில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக தூதுவர் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் நிலைமை உருவாகும் என அவதானிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு தூதுவர் அறிவித்துள்ளார்.
இதன் காரணமாக ஈரான், ஈராக், லெபனான், சிரியா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளின் வான்பரப்பில் விமானங்கள் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தூதுவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
(Visited 38 times, 1 visits today)