ஜெர்மனி தொலைக்காட்சி – வானொலி பயனாளர்களுக்கு விசேட அறிவிப்பு
ஜெர்மனி அரச தொலைக்காட்சி மற்றும் வானொலி என்பனவற்றுக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை மக்கள் செலுத்தாமல் இருப்பதாக தெரியவந்துள்ளது.
கடந்த சில வாரத்தில் ஜெர்மனியில் சமூக உதவி பணம் பெற்று வாழ்கின்றவர்கள் அரசாங்கத்தினுடைய வானொலி, தொலைக்காட்சிகளுக்கான கட்டணங்கைளை செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் சமூக உதவி பணம் பெறாதவர்களே தற்பொழுது தொலைக்காட்சி மற்றும் வானொலி க்கான கட்டணத்தை செலுத்த மறுத்துள்ளனர்.
ஜெர்மனியின் பேர்ளின் மாநிலத்தில் அரச தொலைக்காட்சி மற்றும் அரச வானொலியை வழங்கப்படுகின்ற மாதாந்த பங்களிப்பை பல ஆயிரக்கணக்கான மக்கள் செலுத்தவில்லை என தெரியவந்திருக்கினறது.
அதாவது 2025 ஆம் ஆண்டில் மொத்தமாக 165 113 பேர் இவ்வாறு அரச தொலைக்காட்சி மற்றும் வானொலிக்கு வழங்குகின்ற மாதாந்த கட்டணத்தை செலுத்தவில்லை என்றும்,
இவர்கள் இதை ஒரு எதிர நடவடிக்கையாக மேற்கொண்டு இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.
இந்நிலையில் 2020 ஆம் ஆண்டை 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 11 500 பேர் இவ்வாறு தங்களது மாதாந்த பங்களிப்பை வழங்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பிரதேசத்தில் உள்ள அரச வானொலி மற்றும் தொலைக்காட்சி அமைப்பின் நடவடிக்கைக்கு எதிராக மக்கள் பல கருத்துக்களை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.