தென் கொரியாவில் வாழும் இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு

தென் கொரியாவில் பரவும் காட்டுத் தீ காரணமாக இலங்கையர்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை என தென் கொரியாவில் உள்ள இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது.
எனினும் காட்டுத் தீ பரவும் ஆபத்தான பகுதிகளுக்கு பயணிப்பதைத் தவிர்க்குமாறு தென் கொரியாவில் இலங்கையர்களிடம் தூதரக அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அத்துடன் தென் கொரியாவில் உள்ள இலங்கையர்களுக்கு ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால் தூதரகங்களைத் தொடர்பு கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2 735 2966, 2 735 2967 அல்லது 2 794 2968 என்ற தொலைபேசி இலக்கம் மூலம் தொடர்புக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
(Visited 4 times, 1 visits today)