ஐரோப்பா

குழந்தைகளுக்கான சமூக ஊடக அணுகலை தடை செய்யும் ஸ்பெயின்!

ஸ்பெயினில் 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான சமூக ஊடக அணுகலை தடை செய்யும் திட்டங்களை அந்நாட்டு பிரதமர் பெட்ரோ சான்செஸ் ( Pedro Sanchez) அறிவித்துள்ளார்.

குறித்த சட்டமூலம் பற்றிய மேலதிக நடவடிக்கைகள் அடுத்த வாரம் முதல் ஆரம்பமாகவுள்ளதாக கூறப்படுகிறது.

வெறுப்புப் பேச்சு, ஆபாச உள்ளடக்கம் மற்றும் சமூக ஊடக தளங்களில் பரவும் தவறான தகவல்களின் எதிர்மறை விளைவுகளிலிருந்து இளைஞர்களைப் பாதுகாப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான நடவடிக்கைகளை ஏனைய ஐரோப்பிய நாடுகளும் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

சட்டவிரோத உள்ளடக்கத்திற்கு சமூக ஊடக நிர்வாகிகளை பொறுப்பேற்க வைப்பதற்கும், அல்காரிதம் கையாளுதலை குற்றமாக்குவதற்கும், வலுவான வயது சரிபார்ப்பு அமைப்புகளை கட்டாயப்படுத்துவதற்கும் ஸ்பெயின் ஒரு சட்டமூலத்தை அறிமுகப்படுத்தும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!