காட்டுத்தீயை அணைக்க ஐரோப்பிய நாடுகளின் உதவியை நாடும் ஸ்பெயின்
நாடு முழுவதும் பரவி வரும் காட்டுத்தீயை அணைக்க ஸ்பெயின் தனது ஐரோப்பிய கூட்டாளிகளின் உதவியை நாடுகிறது என்று உள்துறை அமைச்சர் பெர்னாண்டோ கிராண்டே மார்லாஸ்கா தெரிவித்துளளார்.
குறிப்பாக, இரண்டு கனடேர் விமானங்களை தேவைப்படுவதாக மார்லாஸ்கா குறிப்பிட்டுள்ளார்.
“தற்போது எங்களுக்கு இரண்டு கனடேர் விமானங்கள் அவசரமாக தேவையில்லை, ஆனால், வானிலை முன்னறிவிப்பைக் கருத்தில் கொண்டு, அந்த விமானங்களை விரைவில் எங்கள் தேசிய பிரதேசத்தில் வைத்திருக்க விரும்புகிறோம், இதனால் அவை தேவைப்பட்டால் அவற்றைப் பயன்படுத்தலாம்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இப்போதைக்கு அது அவசியமில்லை என்றாலும், மேலும் தீயணைப்பு வீரர்கள் போன்ற அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளிடமிருந்து கூடுதல் உதவியை நாட நாடு தயாராக உள்ளது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





