அணுவாலையின் கழிவு நீரை கடலில் வெளியேற்றும் ஜப்பானின் திட்டத்திற்கு தென்கொரிய மக்கள் எதிர்ப்பு!
ஃபுகுஷிமா ஆலையில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை வெளியேற்றும் ஜப்பானின் திட்டத்திற்கு தென் கொரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
குறித்த திட்டத்தை கைவிடுமாறு வலியுறுத்தி ஏராளமான மக்கள் தென் கொரியாவின் தலைநகரில் ஒன்றுக்கூடி பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர்.
தலைநகர் சியோலில் ஒன்று திரண்ட மக்கள் புகுஷிமாவின் அணுக்கழிவு நீரை கடலில் அகற்றுவதை நாங்கள் கண்டிக்கிறோம்!”எனக் குறிப்பிட்டு பேரணி நடித்தியுள்ளனர்.
சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீர் கடலில் கலக்கப்படுவதால் பாதிப்பு ஏற்படாது என ஜப்பான் கூறியுள்ளது. இது குறித்து பல கட்ட ஆய்வுகள் நடத்தப்பட்ட நிலையில், சர்வதேச அணுசக்தி முகமை ஒப்புதல் வழங்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.





