தென் கொரியாவில் காதலியை கொலை செய்து குளிர்சாதனப் பெட்டியில் சடலத்தை வைத்த காதலன்
தென் கொரியாவில் காதலியை கொலை செய்து குளிர்சாதன பெட்டியில் மறைத்து வைத்த காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் தன்னை அவமானப்படுத்தியமையால் கொலை செய்து பல மாதங்களாக குளிர்சாதன பெட்டியில் மறைத்து வைத்ததாக சந்தேக நபரான காதலன் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
அதன் பின்னர், அவர் காதலியைப் போலவே நடித்து அவரின் குடும்ப உறுப்பினர்களுக்குக் குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும் ஒப்புக்கொண்டுள்ளார்.
40 வயதான காதலன், கடந்த ஆண்டு ஒக்டோபர் 20 ஆம் திகதி வடக்கு ஜியோல்லா மாகாணத்தின் குன்சானில் உள்ள ஒரு வீட்டில் தனது காதலியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.
பங்குச் சந்தை முதலீடுகள் குறித்த தனது ஆலோசனையைப் பின்பற்றாததற்காகக் காதலி தன்னைக் கண்டித்ததால் கோபமடைந்த காதலன் கொலை செய்துள்ளார்.
கொலையின் பின்னர் பல மாதங்களாக குளிர்சாதனப் பெட்டியில் காதலியின் இறந்த சடலத்தை காதலன் மறைத்து வைத்துள்ளார்.
இந்த நேரத்தில், அவர் தனது தொலைபேசியில் குடும்ப உறுப்பினர்களுடன் செய்திகளைப் பரிமாறிக்கொள்வதன் மூலம் உயிரிழந்தவராக நடித்துள்ளார்.
மேலும், அவர் தனது உயிரிழந்த காதலியின் பெயரில் 60,562 அமெரிக்க டொலர் வங்கிக் கடனை பெற்றிருந்தமையும் தெரிய வந்துள்ளது.





