Port city யில் தெற்காசியாவின் மிகப்பெரிய படகு கண்காட்சி – நாளையுடன் நிறைவு
தெற்காசியாவின் மிகப்பெரிய படகு கண்காட்சி கொழும்பு துறைமுக நகரில் நேற்று ஆரம்பமானது.
நாளைய தினத்துடன் கண்காட்சி நிறைவடையவுள்ளது.
போர்ட் சிட்டி விற்பனை வளாகத்தில் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சமுத்திர கைத்தொழில் சபை ஏற்பாடு செய்துள்ள தெற்காசியாவின் மிகப்பெரிய படகு கண்காட்சி பிரதியமைச்சர்களான ச்சதுரங்க அபேசிங்க, ருவண் ரணசிங்க தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதனூடாக தேசிய பொருளாதாரத்திற்கு சிறந்த ஒத்துழைப்பு கிடைக்கப்பெறுவதுடன் துறைசார்ந்த புதிய தயாரிப்புகள், தொழில்நுட்பங்கள் மற்றும் முதலீட்டு சந்தர்ப்பங்களையும் ஏற்படுத்திக்கொள்ள எதிர்பார்க்கப்பட்டுள்ளது.





