100 பேரை காவுகொண்ட தென்னாபிரிக்க தங்கச் சுரங்கம்

தென்னாப்பிரிக்க தங்கச் சுரங்கத்தில் சிக்கி உயிரிழந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது.
இறந்தவர்கள் சட்டவிரோத சுரங்கத் தொழிலாளர்கள் என்று வெளிநாட்டு ஊடகங்கள் கூறுகின்றன.
தென்னாபிரிக்காவில் கைவிடப்பட்ட தங்கச் சுரங்கத்தில் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் குழுவொன்று இந்த விபத்தில் சிக்கியுள்ளது.
பல நாட்களாக சுரங்கத்தில் சிக்கியிருந்த அவர்கள் பட்டினி மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
சுரங்கத்தில் சிக்கியிருந்த பல தொழிலாளர்கள் பலர் மீட்கப்பட்டுள்ளதாகவும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
(Visited 13 times, 1 visits today)