இலங்கை செய்தி

சௌமியமூர்த்தி தொண்டமான் தேசிய தலைவர்: ராதாகிருஷ்ணன் புகழாரம்!

“சௌமியமூர்த்தி தொண்டமான் Soumyamoorthy Thondaman என்பவர் தேசிய தலைவர்களுள் ஒருவர். எனவே, அரச நிறுவனங்களுக்கு அவரது பெயரைவைக்ககூடாது எனக் கூறுவது சிறுபிள்ளைத்தனமான செயலாகும்.”

இவ்வாறு மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வீ. இராதாகிருஷ்ணன் V. Radhakrishnan தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று (05) உiயாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ சௌமியமூர்த்தி தொண்டமான் என்பவர் இந்நாட்டின் ஓர் அடையாளம். தேசியத் தலைவர். அதனால்தான் அவருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான ஒரு தேசிய தலைவரின் ஞாபகார்த்தமாக அரச நிறுவனத்துக்கு அவரது பெயரை வைத்தால் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஏற்புடையது அல்ல.

அவர் மலையக மக்களுக்கு பல சேவைகளைச் செய்துள்ளார்.
மன்றங்களில் மோசடி நடந்தால் அது பற்றி விசாரியுங்கள். ஆனால் நினைவு பெயர் வைக்ககூடாது என கூறுவது சிறுபிள்ளைத்தனமான செயலாகும்.” – என்றார்.

தொண்டமான் தொழில்பயிற்சி நிலையம் தொடர்பில் அண்மையில் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் கடும் விமர்சனங்களை முன்வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!