சீனாவில் தங்கத்தை விழுங்கிய மகன் – அதனைப் பெற்றுக்கொள்ள தாயின் கடும் பிரயத்தனம்
																																		சீனாவில் தங்கத்தை விழுங்கிய மகனிடமிருந்து அதனைப் பெற்றுக்கொள்ள தாய் ஒருவர் முயற்சித்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பிரபலம் அடைந்துள்ளது.
சீனாவின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள ஜியாங்சு மாநிலத்தில் குன்ஷான் (Kunshan) எனும் இடத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
11 வயதான சிறுவன் தவறுதலாக தங்கத்தை விழுங்கிய நிலையில், அதனைப் பெற்றுக்கொள்ள தாய் ஒருவர் ஒரு வார காலம் காத்திருந்துள்ளார்.
10 கிராம் எடையுள்ள தங்கக் கட்டியைத் தாய் கொள்வனவு செய்து வைத்திருந்த நிலையில், அதனைச் சுவைத்துப் பார்க்க ஆசைப்பட்ட சிறுவன் விழுங்கியுள்ளான்.
மகனின் செயலினால் அதிர்ச்சி அடைந்த தாய் உடனடியாக வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளார்.
இதன்போது மகனுக்கு இயற்கை உபாதை ஏற்படும் போது தங்கமும் வெளியேறும் என மருத்துவர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தங்கத்தைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் மகனை வீட்டுக்கு வெளியே மலம் கழிக்க தாய் தடை விதித்துள்ளார்.
ஆனாலும் அவர் எதிர்பார்த்தது போன்று தங்கம் வெளியில் வராமையால் குழப்பம் அடைந்துள்ளார். எனினும் ஐந்து நாட்களின் பின்னர் சிறுவனின் உடலிலிருந்து தங்கம் வெளியேறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் எவ்வாறு வெளியேறியது என்பது தொடர்பான சரியான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. தெய்வாதீனமாக சிறுவனுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
        



                        
                            
