எலும்புகள் மோசமடைந்து வருவதை உணர்த்தும் சில எச்சரிக்கை அறிகுறிகள்

மனித உடலுக்கு அழகையும் வடிவத்தையும் எலும்புகள் தான் கொடுக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் நமது முழு உடலையும் கட்டுப்படுத்தும் சக்தி எலும்புகளுக்கு உண்டு. எலும்புகளின் வலிமையை அதிகரிக்க, எலும்புகளுக்கு நன்மை பயக்கும் உணவுகளை சாப்பிட்டு, அதில் உள்ள சத்துக்களைப் முழுமையாக பெற வேண்டும். இது தவிர, எலும்புகளின் ஆரோக்கியத்தை பராமரிக்க தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
முதுமை, மோசமான வாழ்க்கை முறை அல்லது சில உடல் நல பிரச்சனை, ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்ட பல காரணங்களால், சில நேரங்களில் எலும்புகளின் ஆரோக்கியம் மோசமடைந்து அவற்றின் அடர்த்தி குறைகிறது. இது தான் எலும்பு மெலிதல் என்னும் ஆஸ்டியோபோரோஸிஸ். இது ஏன் ஏற்படுகிறது மற்றும் அதற்கான தீர்வுகள் என்ன என்பதை இந்த கட்டுரையில் பார்ப்போம். முதலில் உடலில் எலும்புகள் பலவீனமாக இருப்பதற்கான அறிகுறிகளை (Health Tips) அறிந்து கொள்ளலாம்.
அடிக்கடி ஏற்படும் எலும்பு முறிவுகள்
1. சிறிய காயம் அல்லது ஏதாவது ஒரு சிறிய புடைப்பு காரணமாக கூட உங்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டால், உங்கள் எலும்புகள் மிகவும் பலவீனமாகவும், தேய்மானமாகவும் இருப்பதாக அர்த்தம்.
2. சில நேரங்களில் மூட்டுகள், முழங்கால்கள் மற்றும் இடுப்புகளில் வீக்கம் இயல்பானது தான். ஆனால் இது தற்காலிகமாக இருந்தால் பரவாயில்லை, ஆனால் நீண்ட காலம் தொடர்ந்தால், அது எலும்பு பலவீனத்தின் அறிகுறியாகும்.
3. நம்மால் சிறிய பொருளை கூட வலுவாக பிடிக்க முடியாமலோ அல்லது சரியாக நடக்க முடியாமலோ இருந்தால், அது நமது எலும்புகளில் ஏற்படும் பிரச்சனையால் தான் எனலாம். எலும்பின் அடர்த்தி குறைவதால் நமக்கு சிறு வேலையைச் செய்வது கூட கடினமாகிறது. இது எலும்புகளின் வலிமை குறைவதற்கான அறிகுறியாகும்.
4. உங்கள் எலும்பு உடைந்து, தகுந்த சிகிச்சை அளித்து விரைவில் குணமடையும். ஆனால், எலும்புகள் பலவீனமாக இருந்தால், விரைவில் குணமடையாது. இதுவும் பலவீனமான எலும்புகள் அல்லது எலும்பு ஆரோக்கியமின்மைக்கான அறிகுறியாகும்.
எலும்புகள் வலிமையை இழப்பதற்கான காரணங்கள்
1. கால்சியம், வைட்டமின்கள் மற்றும் மெக்னீசியம் போன்ற சரியான ஊட்டச்சத்துக்கள் நம் உடலுக்கு கிடைக்கவில்லை என்றால், அது நேரடியாக நமது எலும்புகளை பாதிக்கிறது. உடல் உழைப்பு இல்லாதா உட்கார்ந்த வாழ்க்கை முறை, ஒரே இடத்தில் வேலை செய்பவர்களின் பழக்கமாக உள்ளது. இதனால் எலும்புகளும் பலவீனமடைகின்றன.
2. பெண்களுக்கு மெனோபாஸ் காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் எலும்பு தேய்மானம் ஏற்படுகிறது.
3. நாம் அன்றாடம் உட்கொள்ளும் மருந்துகளால் கூட சில நேரங்களில் எலும்பு தேய்மானம் ஏற்படுகிறது.
4. தைராய்டு பிரச்சினைகள், கீல்வாதம் மற்றும் செரிமான அமைப்பு பிரச்சினைகள் இருந்தால், எலும்பு ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை உடல் உறிஞ்சுவது பாதிக்கப்பட்டு, எலும்புகள் பலவீனம் அடைகின்றன.
எலும்புகளை வலுவாக்க உணவு முறை எப்படி இருக்க வேண்டும்
எலும்புகளை வலுவாக்க கால்சியம் மற்றும் வைட்டமின் டி அதிகம் உள்ள பச்சை இலைக் காய்கறிகள், மீன், பால் பொருட்கள் போன்றவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும்.
வாக்கிங், ஜாகிங் மற்றும் பிற உடற்பயிற்சிகள் மற்றும் பளு தூக்குதல் ஆகியவை மையத்தை வலுப்படுத்த செய்யலாம்.
பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது, உடலில் இருந்து கால்ஷியத்தை உறிஞ்சும் இனிப்பு, சர்க்கரை, உப்பு ஆகியவற்ற அதிக அளவில் எடுத்துக் கொள்வதை தவிர்ப்பது ஆகியவை உடலுக்குத் தேவையான சத்துக்களைப் பெற உதவும்.
வழக்கமான எலும்பு பரிசோதனை செய்து கொள்வது நல்லது. இதைப் பற்றி உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், மேலும் தகவலுக்கு மருத்துவரை அணுகவும்.