வாழ்வியல்

சிறுநீரக பாதிப்பை உணர்த்தும் சில எச்சரிக்கை அறிகுறிகள்!

நமது உடலின் மிக முக்கிய உறுப்புகளில் ஒன்றான சிறுநீரகம், ரத்தத்தை சுத்திகரித்து, அதில் உள்ள நச்சுக்களையும் அழுக்குகளையும் நீக்கும் முக்கிய பணியை மேற்கொள்கிறது.

சிறுநீரகம் சரியாக வேலை செய்யவில்லை என்றால், உடலில் நச்சுக்கள் சேர்ந்து, கடுமையான உடல்நல பிரச்சனைகள் ஏற்படும். மூளை இதயம் என முக்கிய உறுப்புகள் இதனால் பாதிக்கப்பட்டு, கடுமையான சிக்கல்களை ஏற்படுத்தும்.

சிறுநீரக பாதிப்பை உணர்த்தும் சில அறிகுறிகள் ( What Are The Symptoms That Indicates Kidney Problem)

சிறுநீரகம் பாதிக்கப்பட்டதற்கான அறிகுறிகளை, உரிய நேரத்தில் கண்டறிந்து கொண்டால், பெரிய அளவில் உடல் நலன் பிரச்சனை ஏற்படுவதை தவிர்க்கலாம். சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளதை குறிக்கும் முக்கிய அறிகுறிகள் குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

அடிக்கடி சிறுநீர் கழித்தால் அல்லது மிகக் குறைந்த அளவு சிறுநீர் கழித்தல்

உங்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்பட்டால் அல்லது மிகக் குறைந்த அளவு சிறுநீர் வெளியேறினால், அது சிறுநீரகம் பாதிக்கப்பட்டதற்கான எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம். அதோடு சிறுநீரில் அதிக நுரைகள் காணப்பட்டாலோ, துர்நாற்றம் ஏற்பட்டாலோ (Health Alert), அலட்சியப்படுத்தாமல், உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

உடல் மற்றும் முகத்தில் காணப்படும் வீக்கம்

உடலில் இருந்து கூடுதல் திரவத்தை அகற்றும் வேலையை செய்யும் சிறுநீரகம், சரியாக செயல்படாமல் போனால், உடலில் நீர் சேர்ந்து, வீக்கங்கள் காணப்படும். முக்கியமாக முகம், பாதம் மற்றும் கணுக்கால்களில் காணப்படும் வீக்கத்தை அலட்சியம் செய்யாமல், உடனடியாக மருத்துவரை அணுகி, பரிசோதனை செய்து கொள்வது நல்லது. எந்த காரணமும் இல்லாமல் உடலில் வீக்கம் தொடர்வது ஒரு எச்சரிக்கை மணியாகும்.

பலவீனம் மற்றும் சோர்வு

சிறுநீரகங்கள் செயல்திறன் பாதிக்கப்படும் போது ரத்தத்தில் நச்சுக்கள் சேர்ந்து, உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காமல் போகும். இதனால் அதீத சோர்வு மற்றும் பலவீனம் ஏற்படும். எந்தவித வலுவான காரணமும் இல்லாமல், அதீத சோர்வு மற்றும் பலவீனம் தொடர்ந்தால், எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது.

பசியின்மை மற்றும் குமட்டல்

சிறுநீரகங்கள் செயல் இழந்தால், உடலில் நச்சுக்கள் சேர தொடங்குகின்றன. இது செரிமான அமைப்பை பாதித்து, பசியின்மையை ஏற்படுத்தும். மேலும் உண்ட உணவு செரிக்காமல், வாந்தி குமட்டல் போன்ற பிரச்சனைகளும் ஏற்படும். எனவே அடிக்கடி ஏற்படும் வாந்தி குமட்டல் பிரச்சனையை அலட்சியம் செய்ய வேண்டாம்.

உயர் ரத்த அழுத்தம்

சிறுநீரக பாதிப்பின் முக்கிய அறிகுறிகளில் ஒன்று ரத்த அழுத்தம் திடீரென அதிகரிப்பது. ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் முக்கிய பணியை செய்யும் சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளது இது உணர்த்துகிறது.

சருமத்தில் ஏற்படும் அரிப்பு வறட்சி

சிறுநீரகம் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதோடு, உடலில் உள்ள தாதுக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களை சமநிலைப்படுத்துகிறது. இதன் சமநிலை பாதிக்கப்படும் போது, சருமத்தில் அரிப்பு வறட்சி ஆகியவை ஏற்படுகிறது. எனவே, சரும பிரச்சனைகள் நீண்ட நாட்களுக்கு நீடித்தால், அலட்சியம் செய்யாமல் மருத்துவரை அணுகவும்.

(Visited 4 times, 4 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

woman exercising
வாழ்வியல்

ஸ்கிப்பிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

ஸ்கிப்பிங் செய்வதால் பாரிய அளவு நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றது. ஸ்கிப்பிங் என்பது ஆரோக்கியமான உடற்பயிற்சி போன்றது. இது நீங்கள் தொடர்ந்து சுவாசிக்க உதவுகிறது மற்றும் இதயத்தை பலப்படுத்துகிறது.
vegetable and meat
வாழ்வியல்

ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறதா : இந்த உணவுகளை எடுத்துகொள்ளுங்கள்!

ஒருவருக்கு ஹீமோகுளோபின் தேவையான அளவிற்கு இருப்பதை விட குறைவாக இருந்தால் அவர் எப்போதும் சோர்வாக காணப்படுவார். இதைத் தவிர உடல் வலிமையின்மைஇ சருமம் மஞ்சள் நிறமாதல்,  அசாதாரமான