நைஜீரியாவில் ஆயுத முனையில் கடத்தப்பட்ட சில மாணவர்கள் மீட்பு!
வடமேற்கு நைஜீரியாவில் ஆயுத முனையில் கடத்தப்பட்ட 24 மாணவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நவம்பர் 17 ஆம் திகதி கடத்தப்பட்ட குழுவே தற்போது மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டின் ஜனாதிபதி போலா டினுபு (Bola Tinubu) இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படகிறது.
மேலும் கடத்தல் சம்பவங்களைத் தவிர்க்க, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.




