வாழ்வியல்

பப்பாளியுடன் சாப்பிடக் கூடாத ‘சில’ உணவுகள் – எச்சரிக்கை பதிவு

பப்பாளி தற்போது எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் பழம். மலிவானது என்பதோடு இனிப்பானது சத்துக்களுக்கு குறைவே இல்லை. பப்பாளி சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இந்த பழம் வயிற்றுக்கு மிகவும் நன்மை பயக்கும். இதை சாப்பிடுவதால் செரிமானம் மேம்படும் . சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துதல், முதுமையைத் தடுப்பது உள்ளிட்ட பல நன்மைகள் உள்ளன. பப்பாளி ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும், ஆனால் அதை சாப்பிட்ட பிறகு, தவிர்க்க வேண்டிய பல விஷயங்கள் உள்ளன. பப்பாளியை சாப்பிட்ட பிறகு, சில உணவுகளை சாப்பிடுவதால், நன்மைகளுக்கு பதிலாக தீங்கு ஏற்படும்.

Avoid These 5 Foods After Eating Papaya to Prevent Digestive Issues |  NewsTrack English 1

பப்பாளி சாப்பிட்ட பிறகு சாப்பிடக் கூடாதவை

பப்பாளியும் பால் பொருட்களும்

பால், தயிர், பாலாடைக்கட்டி, வெண்ணெய் போன்ற எந்த பால் பொருட்களையும் உட்கொள்ளக்கூடாது. பப்பாளியில் உள்ள என்சைம்கள் பால் பொருட்களை ஜீரணிக்க கடினமாக்குகிறது. பப்பாளி செரிமான அமைப்புக்கு நல்லது. ஆனால், பப்பாளி பழத்தை சாப்பிட்ட பிறகு ஏதேனும் பால் பொருட்களை எடுத்துக் கொண்டால், அது செரிமான அமைப்பை பாதிக்கும். இதனால் வாயு பிரச்சனையும் ஏற்படும்.

6 Foods you should not consume after eating papaya

வெள்ளரிக்காயும் பப்பாளியும்

பப்பாளி சாப்பிட்ட பிறகு வெள்ளரி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். வெள்ளரிக்காயில் அதிக நீர்ச்சத்து இருப்பதால் வயிற்றில் நீர் தேங்குகிறது. இது வாய்வு, வீக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

Can we eat papaya and cucumber together? - Quora

பப்பாளியும் குளீர்ந்த நீரும்

பப்பாளி சாப்பிட்ட உடனேயே குளிர்ந்த நீரை குடிப்பதால், பல செரிமான பிரச்சனைகளை உண்டாக்கும். அதோடு வளர்சிதை மாற்றத்தை பாதிக்கிறது. பப்பாளி சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பவராக இருந்தால் எப்போதும் வெதுவெதுப்பான நீரை குடிக்கவும். இதில் எந்த பிரச்சனையும் இருக்காது.

List of Foods That You Should Never Eat Together | Dangerous Food  Combinations to Avoid | Foods You Should not Mix | - Times of India

பப்பாளியும் முட்டையும்

பப்பாளி சாப்பிட்ட பிறகு உடனேயே முட்டை சாப்பிடக் கூடாது. முட்டையை சாப்பிட்டால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இது அஜீரணம், மலச்சிக்கல் மற்றும் வாந்தி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். எலுமிச்சை, ஆரஞ்சு மற்றும் தக்காளி என இவை அனைத்திலும் அமிலம் உள்ளது. பப்பாளி சாப்பிட்ட பிறகு அமிலத்தன்மை கொண்ட உணவுகளை சாப்பிடக்கூடாது. இது நெஞ்செரிச்சல் மற்றும் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

Does Papaya Go Bad? How Long Does It Last? 2023

பப்பாளியின் ஆரோக்கிய நன்மைகள்

பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் ஒரு வகை சத்து இருப்பதால் பப்பாளி பழத்தை சாப்பிடுபவர்களின் ரத்தத்தில் நோய் கிருமிகள் தங்கி நோயை உண்டு பண்ண வாய்ப்பில்லை. அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது என்கின்றனர் நிபுணர்கள். பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும். பப்பாளிக்காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.

 

 

(Visited 8 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

woman exercising
வாழ்வியல்

ஸ்கிப்பிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

ஸ்கிப்பிங் செய்வதால் பாரிய அளவு நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றது. ஸ்கிப்பிங் என்பது ஆரோக்கியமான உடற்பயிற்சி போன்றது. இது நீங்கள் தொடர்ந்து சுவாசிக்க உதவுகிறது மற்றும் இதயத்தை பலப்படுத்துகிறது.
vegetable and meat
வாழ்வியல்

ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறதா : இந்த உணவுகளை எடுத்துகொள்ளுங்கள்!

ஒருவருக்கு ஹீமோகுளோபின் தேவையான அளவிற்கு இருப்பதை விட குறைவாக இருந்தால் அவர் எப்போதும் சோர்வாக காணப்படுவார். இதைத் தவிர உடல் வலிமையின்மைஇ சருமம் மஞ்சள் நிறமாதல்,  அசாதாரமான