இலங்கை

திருகோணமலையில் புலம்பெயர் தமிழரொருவரின் சமூகப்பணி!

திருகோணமலை மாவட்டத்தில் விளையாட்டு மூலம் இளைஞர்களை ஊக்கப்படுத்தும் விதத்தில் தன்னார்வ அமைப்பொன்று செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கனடாவில் வசித்து வரும் திருகோணமலைமைச் சேர்ந்த மனோதீபன் என்பவர் இளைஞர்கள் மத்தியில் விளையாட்டின் மூலம் இன நல்லுறவை வலுவூட்டும் விதத்தில் பல விளையாட்டு போட்டிகளை நடாக்கி வருவதாகவும் தெரியவருகின்றது.

மனோதீபன் பவுண்டேஷன் என்ற பெயரில் மாவட்டத்தில் பல சமூக செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும் அதிலும் குறிப்பாக விளையாட்டு ,கல்வி மேம்பாட்டு வேலை திட்டங்கள் மற்றும் வறுமையில் வாழும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு சுய தொழில் ஊக்குவிப்புக்கள் போன்ற செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிய வருகின்றது.

இதேவேளை இவரைப் போன்று புலம்பெயர் நாடுகளில் வசித்து வரும் தனவந்தர்கள் ,வறுமையில் வாழும் மக்களுக்கு உதவிகளை வழங்க முன் வர வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

அத்துடன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் குருதி பற்றாக்குறை நிலவிய போது இலங்கை செஞ்சிலுவை சங்கத்துடன் இணைந்து இரத்ததான முகாம் ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

(Visited 6 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்