அமெரிக்காவில் சமூகவலைத்தளங்கள் முடங்கின!
அமெரிக்காவில் உள்ள பல பயனர்களுக்கு பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட செயலிகள் சில மணித்தியாலங்கள் முடங்கியுள்ளன.
Downdetector.com இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
குறித்த இணையத்தளம் வெளியிட்டுள்ள தகவலின்படி, 13,000 பயனர்கள் Instagram அணுகுவதில் சிக்கல்களைப் முறைப்பாடு அளித்துள்ளனர். அதே நேரத்தில் சுமார் 5,400 பயனர்கள் Facebook இயங்கவில்லை எனவும், 1,870 WhatsApp இயங்கவில்லை எனவும் முறைப்பாடு அளித்துள்ளனர்.
டவுன்டெக்டர் அதன் இயங்குதளத்தில் பயனர் சமர்ப்பித்த பிழைகள் உட்பட பல ஆதாரங்களின் நிலை அறிக்கைகளை தொகுத்து செயலிழப்பைக் கண்காணித்துள்ளது.
மேலும் இது குறித்து ராய்ட்டர்ஸ் கேள்வி எழுப்பிய நிலையில், இந்த கேள்விக்கு மெட்டா பதிலளிக்கவில்லை.
(Visited 6 times, 1 visits today)