சமூக ஆர்வலர் நாமல் குமாரவுக்கு 15 நாள் விளக்கமறியல்

சமூக ஆர்வலர் நாமல் குமாரவை 2025 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அவர் கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பேராயர் மேதகு கர்தினால் ரஞ்சித்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் ஒலிப்பதிவு பரப்பப்பட்டமை தொடர்பிலேயே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
(Visited 53 times, 1 visits today)