சோபிதா – நாக சைதன்யாவின் புதிய வீடியோ வெளியானது….
டிசம்பர் 4 ஆம் தேதி, ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் சோபிதாவை கரம்பிடித்தார் நாக சைதன்யா.
சோபிதா காஞ்சிபுர தங்க நிற பட்டு புடவையிலும், நாக சைதன்யா பட்டு வேஷ்டி சட்டையிலும் கம்பீரமாக காணப்பட்டார்.
திருமணம் முடிந்த பின்னர் இவர்கள் இருவரும் வெளியிட்ட புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வாழ்த்துக்களை குவித்தது.
திருமணம் முடிந்த கையோடு, சோபிதா துலிபாலா மற்றும் நாக சைதன்யா ஜோடி, திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த நிலையில், தற்போது அனுராக் காஷ்யப் மகள் ஆலியா காஷ்யப் மற்றும் ஷேன் கிரிகோயரின் திருமண வரவேற்பில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிகழ்வில் சோபிதா கிரீம் கலர் சல்வார் அணிந்திருந்த நிலையில், நாக சைதன்யா கருப்பு நிற பிளேசர் அணிந்திருந்தார். மேலும் கழுத்தில் புதிய தாலியோடு, மிகவும் ஸ்டைலிஷாக ஒரு கொண்டை மட்டுமே போட்டிருந்தார்.