வரலாற்றில் முதல்முறையாக சவுதி அரேபியாவில் பனிப்பொழிவு.!

வரலாற்றில் முதல்முறையாக, சவுதி அரேபியாவின் அல்-ஜாவ்ப் பகுதியில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால் மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
வறண்ட பாலைவன நிலப்பரப்பைக் கொண்ட அல்-ஜாவ்ப் பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது.
அத்துடன், சூறாவளிக் காற்றும் வீசியதால் அது குளிர்பிரதேசமாகவே மாறியுள்ளது.
கடும் பனிப்பொழிவால் எங்கும் வெள்ளைப் போர்வை போர்த்தியது போல காட்சியளிக்கும் பாலைவனப் பிரதேசத்தை சவுதி அரேபியா மக்கள் அதிசயத்துடன் படம்பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
(Visited 20 times, 1 visits today)